
கால்ஷீட் இல்லை என்று அமெரிக்க நடிகை நர்கிஸ் ஃபக்ரி ஒதுக்கிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அசின். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த அசின், கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் படவுலகில் நாயகியாக அறிமுகமானார். இதில் அமீர்கான் ஜோடியாக நடித்தார். சல்மான் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த அசினுக்கு அதிர்ஷ்டம் தொடர்ச்சியாக கைகொடுக்கவில்லை. திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்தன. 2013ம் ஆண்டு அசின் நடித்த ஒரு படம் கூட இந்தியில் திரைக்கு வரவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஆல் ஈஸ் வெல் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் ஷூட்டிங் நடக்கிறது. இதையடுத்து அக்ஷய்குமார் ஜோடியாக சாஹுகீன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்த பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரிக்கு சென்றது. இவர் ஏற்கனவே இந்தியில் ராக்ஸ்டார், மெட்ராஸ் கபே, விரைவில் வெளியாக உள்ள மெயின் தேரா ஹீரோ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் கால்ஷீட் இல்லையென்று கைவிரித்ததையடுத்து சீனியர் நடிகை அசினுக்கு அந்த வாய்ப்பு சென்றது. அதை அசின் ஏற்க¤றார். இதற்குமுன் அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 என்ற படத்தில் அசின் நடித்திருக்கிறார்.