Recent Post

100 கிலோ வெயிட் போட்ட கவுசல்யா



100 கிலோ வெயிட் போட்ட கவுசல்யா
காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் நடித்த கவுசல்யா தொடர்ந்து சொல்லாமலே, பிரியமுடன், சந்தோஷ் சுப்ரமணியம் வரை ஏராளமான படங்களில் நடித்தார். அதன்பிறகு திடீரென்று சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். அவரை கண்டுபிடித்து மீண்டும் தமிழுக்கு அழைத்து வருகிறார் ஹரி. அடுத்து இயக்க உள்ள விஷால்-ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கவுசல்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார். கவுசல்யா சினிமாவில் தலைகாட்டாமல் இருந்ததற்கு காரணம், அவர் 100 கிலோ எடைபோட்டு குண்டானதுதான். உடல் பாதிப்பு காரணமாக இப்படி எடை கூடி உள்ளதாம். தற்போது 79 கிலோவாக தனது எடையை குறைத்திருக்கிறார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, நிஜம்தாங்க உடல்பாதிப்பால் 100 கிலோவாக உடல் எடை கூடிவிட்டது. அதற்கான ட்ரீட்மென்ட் எடுப்பதற்காக படங்களில் நடிக்காமல் இருந்தேன்.

சிகிச்சையுடன் 1 மணிநேர தியானம், யோகா பயிற்சியுடன் கடுமையான உணவு கட்டுப்பாடு கடைபிடித்தேன். உண்மையிலே இப்படியெல்லாம் செய்தால் எடை குறையுமா என்று சில பெண்கள் சந்தேகத்துடன் கேட்கிறார்கள். நம்பிக்கை வைத்து தவறாமல் இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் நிச்சயம் எல்லோராலும் முடியும்.

நான் என்னைப்பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் வெயிட் குறைக்க முடிவு செய்திருக்கிறேன். ஹரி இயக்கும் படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறேன். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்றார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)