
ஏவி.எம் நிறுவனம் இதுவரை 176 திரைப்படங்களையும், 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களையும் தொடர்ந்து தயாரித்து வெளியிட்டு வருகின்றது.
இப்பொழுது நான்காவது தலைமுறையாக அருணா குகன், அபர்ணா குகன் இணைந்து இந்த காலகட்டத்திற்கு ஏற்ப இண்டர்நெட்டிற்காக ‘இதுவும் கடந்து போகும்’ என்ற 55 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இது ஏவி.எம் நிறுவனத்தின் 177வது திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 14ந் தேதி முதல் யூடியூப்பில் வெளியிடுகிறார்கள்.
எவ்வளவு பெரிய துயரமும் கால ஓட்டத்தில் மாறிவிடும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் சிவாஜி தேவ் நாயகனாக நடிக்கிறார். ஷில்பா பட் ஜோடியாக நடித்திருக்கிறார். ரவி ராகவேந்தர், பெர்கின் ஜான்ஸ், அனுஷா வர்மா, அஞ்சலி உபாசனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு சலீம் பிலால் மேற்கொள்கிறார். உமாசங்கர் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிரபாஹரன் எழுதி அனில் கிருஷ்ணனுடன் இணைந்து இயக்கியிருக்கிறார்.