Recent Post

அடுத்த மங்காத்தா ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் வெங்கட்பிரபு!1



venkat_prabhu_director
பாலா இயக்கிய நந்தா படத்தில் நடிக்க வேண்டியவர் அஜீத்குமார்தான். ஆனால் படம் தொடங்கியிருந்த நேரத்தில் பாலா, அஜீத்திற்கிடையே ஏற்பட்ட சலசலப்பினால் அப்படத்திலிருந்தே வெளியேறினார் அஜீத்.
அதனால் அதையடுத்து சூர்யா கமிட்டானார். அப்படம் அவரது கேரியரில் முக்கிய இடம்பிடித்தது. ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்த்தியது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அஜீத்துக்காக வெங்கட்பிரபு ரெடி பண்ணிய கதை ஒன்றும் சூர்யாவுக்கு வருகிறது. மங்காத்தாவை இயக்கி ஹிட் கொடுத்த வெங்கட்பிரபு, அதையடுத்து சூர்யாவுக்குத்தான் கதை சொன்னார்.
ஆனால், அவர் சிங்கம்-2வில் பிசியாக இருந்ததால், அந்த கேப்பில் அவரது தம்பி கார்த்தியை வைத்து பிரியாணி கிண்டினார் வெங்கட்பிரபு. ஆனால், சூடாக இருக்க வேண்டிய பிரியாணி, ஊசிப்போயிருந்ததால் படம் ஊத்திக்கொண்டது.
இந்த நிலையில், சிங்கம்-2விற்கு பிறகு கெளதம்மேனன் உள்பட சில டைரக்டர்கள் சொன்ன கதையில் திருப்தி ஏற்படாமல் இப்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அதற்கடுத்து நடிக்க சரியான கதை செட்டாகாததால் வெங்கட்பிரபுவை அழைத்து தனக்கு கதை பண்ண சொல்லியிருக்கிறார்.
அதனால், மங்காத்தாவிற்கு பிறகு அஜீத்துக்காக ஒரு கதையை ரெடி பண்ணி வைத்துக்கொண்டு திரியும் அவர், கெளதம்மேனன் படத்தையடுத்து, வேறு சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதால் தனக்கு இப்போதைக்கு தலயின் தரிசனம் கிடைக்காது என்பதால், அவருக்காக ரெடி பண்ணி வைத்திருககும் கதையை சூர்யாவுக்கு திருப்பி விடுகிறாராம். அஞ்சான் படப்பிடிப்பு முடிந்ததும், சூர்யாவைக்கொண்டு அடுத்த மங்காத்தா ஆட்டத்தை ஆரம்பிக்கிறாராம் வெங்கட்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)