Recent Post

20 ஆண்டு பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்



மும்பை: 20 ஆண்டு பகையை மறந்து ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். பாலிவுட் நடிகைகளில் பலருக்கு பலரை பிடிக்காது. அதனால் பொது இடங்களில் ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காமல் செல்வார்கள். அப்படிப்பட்ட பகை தான் ஐஸ்வர்யா ராய்க்கும், சுஷ்மிதா சென்னுக்கும் இடையே உள்ளது. இந்த பகை எப்பொழுது ஆரம்பித்தது தெரியுமா?

1994ம் ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது சுஷ்மிதா சென் பட்டத்தை தட்டிச் சென்றார். அப்போது ஆரம்பித்தது அவர்களுக்குள் மோதல்.

இந்திய அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியானார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சுஷ். ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்றார்.

அழகி பட்டம் வென்ற பிறகு ஐஸ்வர்யாவும், சுஷ்மிதாவும் சினிமாவுக்கு வந்தனர். ஐஸ்வர்யா பெரிய நடிகை ஆனார். ஆனால் சுஷ்மிதாவால் ஐஸ் அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை

.
குழந்தை பெற்ற பிறகு நடிக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா பிரஹலாத் காக்கட்டின் ஹேப்பி ஆனிவர்சரி படம் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்ய உள்ளார்.

ஹேப்பி ஆனிவர்சரி படத்தில் ஐஸ்வர்யாவுடன் நடிக்குமாறு பிரஹலாத் சுஷ்மிதா சென்னிடம் கேட்டுள்ளார். அவரது கதாபாத்திரம் பிடித்துப் போகவே சுஷ்மிதா சென்னும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆக 20 ஆண்டு பகையை மறந்து இருவரும் நடிக்கவிருக்கிறார்கள்.

முன்னதாக இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித்தும், ஜூஹி சாவ்லாவும் 27 ஆண்டு கால பகையை மறந்து அண்மையில் ரிலீஸான குலாபி கேங் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)