Recent Post

4 ஹீரோக்களுடன் ரேணிகுண்டா சனுஷா!



ரேணிகுண்டா படத்தில் அறிமுகமானவர் சனுஷா. அதற்கு பிறகு பெரிதாக அவருக்கு தமிழில் வாய்ப்பில்லை. மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது கொட்டாங்குச்சி என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.
தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகும் இந்தப் படத்தில் குணசித்திர நடிகர் ஜெயபிரகாசின் மகன் நிரஞ்சன், தெலுங்கு இயக்குனர் நாகேந்திர பிரசாத் மகன் ராம்சாய்நாத் மற்றும் யுவகிருஷ்ணன், சீனிவான் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். சனுஷா ஹீரோயின். செல்வகணேஷ் இசை அமைக்கிறார், கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
எஸ்.எஸ்.ஸ்ரீசரவணன் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் சுருக்கமாக இப்படி கூறுகிறார் “கொட்டாக்குச்சியின் பயன்பாடுகள் அதிகம், ஆனால் அதனை யாரும் மதிப்பதில்லை. அதுபோல இந்த சமுதாயத்திற்காக நான்கு இளைஞர்கள் போராடுகிறார்கள்.
அவர்களை யாரும் மதிப்பதில்லை. இதனால் கோபமடையும் இளைஞர்கள் நாலுபேர் மதிக்கிறதுக்காக ஒரு காரியத்தை கையில் எடுகிறார்கள். அது என்ன? அதற்கு பிறகு அவர்களுக்கு மரியாதை கிடைத்ததா என்பதுதான் படத்தின் முழுக் கதை” என்கிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)