
நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாத கவுண்டமனி, தற்பொது 49 ஓ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படம '49 ஓ'. இதில் கதையின் நாயகனாக கவுண்டமணி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல முன்னனி நடிகை நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தமிழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஆரோக்கியதாஸ் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். இவர், கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரம் கே.குமார் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சமீபத்தில் இந்தப் படத்திற்காக யுகபாரதி எழுதிய “அம்மா போல அள்ளித்தரும் மழைதான்.. அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்..” என்கிற பாடல் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ புகழ் ஜெயமூர்த்தி குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
படத்தில் மழை வரம் வேண்டி கவுண்டமணி பாடுவதாக அமைந்த இந்தப்பாடலின் சிங்கிள் ட்ராக்கை இன்று ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்மில் கேட்டு ரசிக்கலாம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.