Recent Post

கௌதம் மேனன் படத்தில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்கா-எமிஜாக்சன்!




வீரம் படத்திற்கு பிறகு அஜீத் கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளது.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க போகின்றனர். அதில் முதலாவது நாயகியாக நடிக்க வைக்க அனுஷ்காவை கேட்க அவர் தெலுங்கு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் தள்ளிப்போட பாலிவுட் பக்கம் பார்க்க ஆரம்பித்தார் கௌதம். இடையில் சமந்தா அஜித் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கௌதம் மேனனை சுத்தி சுத்தி வந்தார். ஆனால் நீதானே என் பொன்வசந்தம் படம் தோல்வியை கருதி சென்டிமெண்ட் பார்த்து சமந்தாவிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்துவிட்டார் கௌதம் மேனன்.
பிறகு அனுஷ்காவே அஜித் படம் என்பதால் எப்படியோ தெலுங்கு படத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். முதல் ஹீரோயின் ஓகேயானதால் இரண்டாவது ஹீரோயினுக்காக மீண்டும் பாலிவுட் பக்கம் தூண்டில் போட்டிருக்கிறார் கௌதம் மேனன். ஆனால் அஜித் தரப்போ பாலிவுட் பக்கம் ஏன் போக வேண்டும் என்று எமிஜாக்சனை கைகாட்ட தற்போது இந்த இரண்டு ஹீரோயின்களும் படத்தில் நடிக்கப் போவது முடிவாகிவிட்டதாம்.
ஐ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சன் அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதால் தற்போது கெளதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். எமி ஜாக்சன் நடிக்கும் அனைத்தும் காட்சிகளும் வெளிநாட்டில் படமாக்கப் படுவதாகவும், அது எந்த நாடு என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கெளதம் மேனன் கூறியுள்ளார்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)