Recent Post

ரொம்ப நல்லவன்டா நீ: முன்னோட்டம்




ரொம்ப நல்லவன்டா நீ....! என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இதில் நாயகனாக மிர்ச்சி செந்தில் நாயகியாக ஸ்ருதிபாலா நடிக்கின்றனர். கடலோர கவிதைகள் ரேகா முக்கிய கேரக்டரில் வருகிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜான்விஜய், சோனா, இமான் அண்ணாச்சி, கனல்கண்ணன், சாமிநாதன், ரமா, சிசர் மனோகர், சர்வஜித் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மகாபிரபு, சாக்லேட், குத்து, ஏய், பகவதி, வாத்தியார், வல்லக்கோட்டை போன்ற படங்களை டைரக்டு செய்தவர்.

ரொம்ப நல்லவன்டா நீ படம் பற்றி ஏ.வெங்கடேஷ் சொல்கிறார். அப்பாவி இளைஞன் புத்திசாலித் தனமாக செய்யும் விளையாட்டின் வினையே இப்படம். காமெடி மற்றும் திரில்லருக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது.

நாயகன் கேரக்டருக்கு என்பதுகளில் இருந்த பாக்யராஜ் தோற்றத்தில் உள்ள ஆள் தேடினேன். மிர்ச்சி செந்தில் பொருத்தமாக இருந்தார். டி.வி. கலைஞர்களும் இதில் நடிக்கின்றனர்.

இசை: பிரேம், ராமதாஸ், வசனம்: கல்யாணகுமார், ஏ.வெங்கடேஷ், ஸ்டண்ட் : கனல்கண்ணன், நடனம்: சங்கர், ஹபீப், சுஜாதா, எடிட்டிங்: விஜய் தயாரிப்பு தீபக்குமார், ஷெனாய் மாத்ய.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)