
பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் படத்தை பற்றிய நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு விடுவதால் எந்த படத்துக்கும் இப்போது ஓப்பனிங் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார். நளனும் நந்தினியும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனை வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது: இப்பல்லாம் மக்கள் தியேட்டருக்கு வர்றதே ரொம்ப குறைஞ்சு போச்சு. அதுக்கு காரணம் என்னென்னு கேட்டீங்கன்னா இந்த பேஸ்புக்கும், டுவிட்டரும்தான். படம் ரிலீசுக்கு முன்னாடியே படத்தோட டிரைலர், டீசரை வச்சே படம் மொக்கையா இருக்கும், பிளாப் ஆகும்னு இஷ்டத்துக்கு எழுதுறாங்க. இதை எப்படி தடுக்குறதுன்னு யோசனை பண்ணிக்கிட்டிருக்கோம்.
ஜனவரி மாசத்துலேருந்து கணக்கு பண்ணினீங்கன்னா பல விஷங்களை புரிஞ்சுக்க முடியும். நல்ல கதைகளை செலக்ட் பண்ணி நடிக்க கூடியவர் அந்த இயக்குனர் மற்றும் நடிகர். தொடர்ந்து ஹிட் கொடுக்கிறவர். அவர் படமே ஓடலைன்னா இதை எங்க போய் சொல்றது. இந்தியில பெரிய புரட்யூசர் யாஷ் ராஜ் பிலிம்ஸ் எடுத்த ஆஹா கல்யாணம் படம் வெறும் 25 லட்சம்தான் கலெக்ட் பண்ணிச்சு. அந்த படத்தோட தயாரிப்பு செலவு கோடிக் கணக்குல. கேட்டா இங்க உள்ளவங்களுக்கு யாஷ் ராஜை எப்படித் தெரியும்னு சொல்றாங்க. படம் தயாரிக்கிறவங்க டிரைலருக்கு முக்கியத்தும் கொடுங்க. அப்பதான் படத்தை பற்றி நல்ல அபிப்ராயம் பரவும்.
இவ்வாறு கேயார் பேசினார்.