Recent Post

முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தப் படம் இயக்கும் அதிர்ஷ்டசாலி இயக்குநர்!



mqdefault
ஒரு படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்று கணிப்பது லேசுப்பட்ட விஷயமில்லை. ஒரு சில தயாரிப்பாளர்களின் கணிப்பு பல நேரங்களில் சரியாகவே இருக்கிறது.
இந்த வித்தை தெரிந்த தயாரிப்பாளர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற படத்தின் இயக்குநரை அணுகி, உங்களுடைய அடுத்தப் படத்தை தாங்களே தயாரிக்கிறோம் என்று சொல்லி பெரும்தொகையை அட்வான்ஸாகக் கையில் திணித்துவிடுகிறார்கள்.
எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணனுக்கு இவன் வேற மாதிரி படம் கிடைத்ததும், அட்டகத்தி இயக்குநர் ரஞ்சித்துக்கு கார்த்தி நடிக்கும் காளி படம் கிடைத்ததும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராமுக்கு லிங்குசாமியின் படம் கிடைத்ததும் – இந்த அடிப்படையில்தான்.
ராஜாராணி படம் வெளியாகும் முன்பே அப்படத்தை இயக்கிய அட்லீக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பைக் கொடுத்தது ராஜாராணி படத்தைத் தயாரித்த படநிறுவனம்தான்.
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக்கூ படத்தின் இயக்குநர் ராஜுமுருகனுக்கு, அப்படம் வெளியாகும் முன்பே அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்துவிட்டது.
குக்கூ படத்தைத் தயாரித்த பட நிறுவனமேதான் அவருக்கு இரண்டாவது வாய்ப்பையும் வழங்கி இருக்கிறது.
ராஜுமுருகன் – அதிர்ஷ்டசாலி இயக்குநர்தான்!

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)