Recent Post

பூலோகம் யூனிட்டை இழுத்தடித்த பிரகாஷ்ராஜ்!



பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், திறமைசாலியான அவர், படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் 12 மணிக்குத்தான் வருவார். அதேபோல், செல்போனை கையில் எடுத்து விட்டால், டேக் ரெடியாகி விட்டது என்று உதவி இயக்குனர்கள் சொன்னாலும் அதை காதில் வாங்கிக்கொள்ள மாட்டார். எப்போது பேசி முடிக்கிறாரோ அதுவரைக்கும் யூனிட் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

இந்த பிரச்னை காரணமாகத்தான், பாலிவுட்டுக்கு சென்ற அவரை அப்படியே ஓரங்கட்டியது கோலிவுட். அதனால்தான் தமிழில் படங்கள் இல்லாத பிரகாஷ்ராஜ், தனது டூயட் மூவீஸ் மூலமே தயாரித்து இயக்கி நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில். ஜெயம் ரவி நடித்து வரும் பூலோகம் படத்திலும் நடிக்கிறார் அவர். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே தனக்கு எப்போது வசதிப்படுகிறதோ அப்போதுதான் கால்சீட் கொடுத்து நடித்து வந்தாராம். ஆனால், இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்ட நிலையில், டப்பிங் பேசிக்கொடுக்க மாதக்கணக்கில் டீலில் விட்டு வந்த அவரை, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டர் டப்பிங் பேச வைக்க ஏற்பாடு நடந்ததாம்.

அதற்கு அவரோ, என்னால் சென்னைக்கு வரமுடியாது. நீங்கள் ஐதராபாத்துக்கு வாருங்கள். அங்கே உள்ள தியேட்டரில் டப்பிங் பேசி தருகிறேன் என்று யூனிட்டை அங்கே வரச்சொன்னாராம். விட்டால், இன்னும் பல மாதங்களாக இழுத்தடித்து விடுவார் என்பதால், விழுந்தடித்து ஓடி டப்பிங் பேசி வாங்கியிருக்கிறார்கள்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)