Recent Post

ராட்டினம் தங்கசாமி துணிச்சலான டைரக்டர்! -பாராதிராஜா பாராட்டு



ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ள அடுத்த படம் எட்டுத்திக்கும் மதயானை. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், விக்ரமன், சசி, பேரரசு, ஸ்டேன்லி, ஏ.வெங்கடேஷ், ரோகினி, ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பாரதிராஜா பேசுகையில், ராட்டினம் படம் வந்தபோது, என்ன இப்படியெல்லாம் படத்திற்கு டைட்டில் வைக்கிறார்கள் என்று நினத்துக்கொண்டேன். ஆனால், நான் மலேசியா சென்றிருந்தபோது என் மகள் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது படத்தை பார்த்தேன். அசந்து விட்டேன். நடுத்தர வர்க்கத்தை ரொம்ப யதார்த்தமாக படமாக்கியிருந்தார் தங்கசாமி. அந்த மாதிரி க்ளைமாக்ஸ் வைப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும் அதனால் சென்னை வந்த பிறகு ஒருநாள் அவரை மனதார பாராட்டினேன்.

அதோடு, இப்போது இயக்கியுள்ள எட்டுத்திக்கும் மதயானை படத்தை ராட்டினத்தை விடவும் சிறப்பாக இயக்கியிருப்பார் என்று நினைக்கிறேன். படத்தின் பாடல், டிரைலரைப் பார்க்கையில் சிறப்பாக உள்ளது.

மேலும், இப்போதைய படங்களின பாடல்களில் லிப் மூவ்மெண்ட் இல்லாமல் இருக்கிறது. லிப் மூவ்மெண்ட் இருந்தால்தான் நடிகர்-நடிகைகளின் நடிப்பு வெளிப்படும். அதோடு, இப்படத்தில் இடம்பெற்றுள்ள சுங்கடி சேலை கட்டி சுந்தரி வந்தாள் என்ற பாடல் காட்சியில் சுவிட்சர்லாந்து மாடர்ன் டிரஸ் அணிந்து கதாநாயகியை ஆடவைத்துள்ளனர். எங்கே போச்சு சுங்கடி சேலை? என்று பேசிய பாரதிராஜா, கதைக்களம், தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துகிற மாதிரி பாடல் காட்சிகளிலும் கவனம் செலுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)