
இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், தயாரித்து இயக்கியுள்ள படம், ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே...’ இதன் தலைப்பை வைத்து சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருவதாக, எஸ்.எஸ்.குமரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று, பாரதியார் பாடலில் இருந்து இந்த தலைப்பை எடுத்து டைட்டிலாக வைத்தேன். ஆனால், ஏதோ தவறான கருத்தைச் சொல்வது போல சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்பி, படத்தை முடக்க சதி செய்கிறார்கள். சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு தியேட்டரில், தலைப்பு ஒருமாதிரியாக இருக்கிறது என்று சொல்லி திரையிட மறுத்தார்கள். பிறகு படம் பார்த்துவிட்டு திரையிட்டார்கள். அனைத்து தரப்பும் பார்க்கலாம் என்று, சென்சார் ‘யு’ சான்றிதழ் வழங்கியது. அப்படியிருக்கும் போது படம் பற்றி தவறான அபிப்பிராயத்தை திட்டமிட்டே சிலர் பரப்பி வருகிறார்கள்.