Recent Post

வருகிறது கோச்சடையான் ரதம்...!!



கோச்டையான் ரிலீசுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் கோச்சடையான் ரத யாத்திரை நடத்த அவரது திருப்பூர் ரசிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

*கோச்டையான் ரிலீஸ் அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு கோச்சடையான் உருவம் பொறித்த வெள்ளி டாலர் பரிசு வழங்குவது.

*கோச்டையான் திருட்டு விசிடி வந்து விடாமல் தடுக்க ரசிகர்களைக் கொண்ட தனி கண்காணிப்பு படை அமைப்பது.

*கோச்டையான் ரிலீசாகும் தியேட்டர் முன் ரசிகர்களுக்காக நீர்மோர் பந்தல் அமைப்பது.
*கோச்டையானை வரவேற்கும் விதமாக பிரமாண்ட ரதம் தயாரித்து அதில் கோச்சடையான் ஏறி பவனி வருவதுபோல் அமைத்து தமிழ்நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்துவது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டதில் தெற்குமாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் கா£த்தி, பொருளாளர் நகேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் தென்றல், செயலாளர் சுதாகர், பொருளாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ரசிகர் ஒருவர் கோச்சடையான் தோற்றத்துடன் வந்திருந்தார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)