
திருடர்கள் மட்டுமே வாழும் ஊர் பற்றிய படமாக உருவாகிறது கன்னக்கோல். இப்படத்தை எழுதி இயக்கும் வி.எ.குமரேசன் கூறியதாவது: ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தொழில் பிரபலமாக இருக்கும் ஆனால் ஒரு ஊரே திருட்டை தொழிலாக கொண்டு வாழ்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லோரும் திருந்தி வாழ முடிவு செய்தாலும் 4 வாலிபர்கள் மட்டும் திருடியே பிழைப்பு நடத்துகிறார்கள். அவர்களின் கதி என்ன என்பதுதான் கதை. நாடோடி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த பரணி ஹீரோவாக நடிக்க அவர்களும் மேலும் 3 திருடர்களாக கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன், சுரேஷ் நடிக்கின்றனர்.
காருண்யா ஹீரோயின். இளவரசு, அகோரம், ராஜ்கபூர், சார்லி, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புதுச்சேரி, புதுக்கோட்டையில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஸ்ரீசெல்வா ஒளிப்பதிவு. பாபி இசை. வி.ராமதாஸ் தயாரிப்பு. இப்படத்தின் ஆடியோவை இயக்குனர் சமுத்திரக்கனி வெளியிட்டார்.