நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய்சேதுபதியின் காதலியாக நடித்தவர் காயத்ரி. அதற்கு முன்பே 18 வயசு என்ற படத்தில் படம் முழுக்க நடித்த போதும், இந்த படம் தான் காயத்ரியை வெளிச்சம் போட்டது. அதுவும் ஓவர் மேக்கப்பில் காட்சிக்கேற்ப அவரை மாற்றி ஒரு மார்க்கமாக காட்டியிருந்தனர். அதையடுத்து, அதே விஜய்சேதுபதி நடித்த ரம்மி உள்பட சில படங்களிலும் நடித்த காயத்ரிக்கு, இப்போது கைவசம் சில படங்கள் உள்ளன. இருப்பினும் காயத்ரியின் மார்க்கெட்டும், சம்பளமும்தான் உசரவே இல்லை. இன்னமும் புதுமுக நடிகைகளின் நிலையில்தான் இருக்கிறார். அதனால் இப்படியே போனால் கைவசம் இருக்கும் படத்தோடு தனது கோலிவுட் ஆட்டம் முடிவுக்கு வந்து விடும் என்பதை யூகித்து விட்ட காயத்ரி, அடுத்தகட்டமாக முன்னணி ஹீரோக்களுக்கு வலை வீச தொடங்கியிருக்கிறார்.
அவரது பட்டியலில் தனுஷ், ஆர்யா, விஷால் என ஒரு அரை டஜன் நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்களது பர்சனல் மொபைல் நம்பரை சினிமா நண்பர்கள் மூலம் சேகரித்து வைத்திருக்கும் காயத்ரி, தினமும் அவர்களுக்கு போன் போட்டு நலம்குலம் விசாரிப்பவர், உங்களுடன் ஒரே படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை என்னுள் இருக்கிறது என்று கூறி வருகிறாராம்.
இதற்கு சிலர் உடன்படாதபோதும், சில நடிகர்கள், காயத்ரிக்கு கைகொடுத்திருக்கிறார்களாம். அதோடு முழு கமர்சியல் கதாநாயகியாக மாற வேண்டும் என்றும் கண்டிசன் போட்டிருக்கிறார்களாம். அதற்கு முழு சம்மதம் சொல்லியிருக்கும் காயத்ரி, கதைக்கு அவசியப்பட்டால் நயன்தாரா, ஹன்சிகாவை மிஞ்சும் கவர்ச்சிப்புயலாக உருவெடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.