Recent Post

மான்கராத்தே ஆடியோ விழாவுக்கு அடியாட்களுடன் வரவில்லை!- மறுக்கிறார் சிவகார்த்திகேயன்



சிவகார்த்திகேயன்-ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மான்கராத்தே. இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது அதற்கு முந்தின வாரம் அதே தியேட்டரில் நடைபெற்ற ரஜினியின் கோச்சடையான் ஆடியோ விழாவை விட கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, தியேட்டர் வாசலிலேயே ஏராளமானோர் கருப்பு உடையணிந்து குண்டர்களாட்டம் நின்று கொண்டிருந்தார்கள். அதோடு, தியேட்டருக்குள் சிவகார்த்திகேயன் வந்தபோது அவரை சூழ்ந்தபடி அழைத்து வந்தனர். இப்படியாக விழா அரங்கத்தில் அங்குமிங்குமாக சுமார் 50 குண்டர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். அதோடு, கெடுபிடியும் அதிகமாக இருந்தது.

ஆனால் இதை நேரில் பார்த்த மீடியாக்கள் பவர்ஸ்டாரைப்போன்று லாரியில் ஆட்களை கொண்டு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்று செய்தி வெளியிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்தார் அவர். அதன்காரணமாக, அவசர அவசரமாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது, நான் 50 அடியாட்களுடன் ஆடியோ விழாவுக்கு வந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் நான் அப்படியெல்லாம் வரவில்லை. அப்படியே அடியாட்களுடன் வந்திருந்தால் ஆளுக்கு 2 ஆயிரமாவது கொடுக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் அவர்களுக்கே ஒரு லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கெல்லாம் நான் இன்னும் சம்பாதிக்கவில்லை என்றார்.

மேலும், அடியாட்களும் வரும் அளவுக்கு கட்ட பஞ்சாயத்தோ, வட்டி பிஸ்னஸோ நான் பண்ணவில்லை என்று தெரிவித்த சிவகார்த்திகேயன், அந்த விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்படட பட நிறுவனம்தான் செய்திருந்தது என்றும் கூறினார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)