பிடிச்சிருக்கு என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விசாகா சிங்.
அதைத் தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிற படத்தில் நடித்தார். இந்தப் படம் விசாகா சிங்கிற்கு சரியான திருப்புமுனையை ஏற்படுத்தியது. படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றி அவரை மீண்டும் அதே கூட்டணியுடன் இணைய வைத்துள்ளது. தற்போது விசாகா சிங் வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்தப் படத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் கூடி மகிழும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது குலாப் ஜாமுனை சாப்பிட்டபடியே சிரித்து பேசுவது போல் காட்சிப் படுத்தப்பட்டதாம். இதற்காக கிண்ணம் ஒன்றில் நிறைய குலாப் ஜாமுனை வைத்திருக்கிறார்கள். அந்த காட்சி படமாக்குவதற்கு முன் ஒரு குலாப் ஜாமுனை எடுத்து சாப்பிட்டிருக்கிறார் விசாகா. அதன் சுவை பிடித்துவிடவே கிண்ணத்தில் இருந்த 10க்கும் அதிகமான குலாப் ஜாமுன்கள் அனைத்தையும் வெளுத்து கட்டிவிட்டாராம்.
இதை பார்த்ததும் படக்குழுவினர் அதிர்ச்சியே அடைந்துவிட்டார்களாம். உடனே கடையிலிருந்து மீண்டும் குலாப் ஜாமுனை வாங்கிவந்து அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். சம்மந்தப்பட்ட காட்சியை எடுத்து முடிக்கும் வரை குலாப் ஜாமுனை விசாகா சிங் கண்ணில் காட்டவில்லையாம். அதை மறைத்து வைத்தே படமாக்கி ஒருவழியாக முடித்திருக்கிறார்கள்.
