Recent Post

விஜய்யிடம் கதை சொல்லி ஓ.கே பண்ணிய சமுத்திரகனி!




Samuthirakani says story to Vijay
நிமிர்ந்து நில் படத்தில் நடித்து வந்தபோது, சமுத்திரகனியிடம் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாலும் சமுதாயத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அவர் மூலமாக நிறைய நாட்டு நடப்புகளை நான் தெரிந்து கொண்டேன் என்று அமலாபால் கூறிவந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், நிமிர்ந்து நில் படத்தை சமுதாயத்துக்கு தேவையான கதையில் இயக்கி, ரசிகர்களிடம் மட்டுமின்றி, சகாயம் ஐ.ஏ.எஸ், மற்றும் தேவாரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றுள்ளார் சமுத்திரகனி. மேலும், இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களின் கவனத்துக்கும் வந்து விட்டார் அவர். அந்த வகையில், சமீபத்தில் விஜய்க்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி. கதை விஜய்க்கும் பிடித்து விட்டதாம். இறுதி சுற்று பேச்சுவார்த்தை முடிந்தபிறகு அப்படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளாராம் சமுத்திரகனி.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)