Recent Post

நான் ஜெயிக்கிற குதிரையாக இல்லை என்றாலும் ஓடுகிற குதிரையாக நிலைத்திருக்க ஆசை! தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்!




I want to like running horse says producer Ravinder Chandrasekar
லிப்ரா புரொடக்ஷ்ன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வழங்கும், 'நளனும் நந்தினியும்' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., அபிராமி ராமநாதன், அசோக் ஜி.லோதா, இயக்குநர் கே.பாக்யராஜ், கரு.பழனியப்பன், சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், பா.இரஞ்சன், நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஸ்ரீகாந்த், சிபிராஜ், பாடலாசிரியர் மன்கார்கி உள்ளிட்டோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடந்தேறியது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய கே.பாக்யராஜ், இங்கு இப்பட அறிமுக ஒளிப்பதிவாளர் நிஷார் ஷெபி பெயர் சொன்னபோது சிலரும், இசையமைப்பாளர் அஷ்வத் பெயர் சொன்னபோது சிலரும், அறிமுக இயக்குநர் வெங்கடேசன்.ஆர் பெயர் சொன்னபோது சிலரும் கைதட்டினர். அது அவரவரது நண்பர்கள். தங்கள் நண்பர்களை மகிழ்விக்க கைதட்டினர் சரி., அதேநேரம் இயக்குநர்கள் சமுத்திரகனி, கரு.பழனியப்பன் பெயர்களை சொன்னபோதும், அவர்கள் மேடையில் பேசியபோதும் எல்லோரும் பாரட்சமின்றி கைதட்டினர். அப்பொழுது தான் நல்ல டெக்னீஷியன்கள், டைரக்டர்களையும் இனங்கண்டு கொண்டு மதிக்கும், ரசிக்கும் திரையுலகில் இன்று நாம் இருக்கிறோம் எனும் பெருமிதம் எனக்கு ஏற்பட்டது. அதுமாதிரி இப்பட டெக்னீஷியன்களும், இயக்குநரும், பெயரும் புகழும் வாங்க வேண்டும். தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் ஒரு என்.ஆர்.ஐ., அவரும் இப்படம் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றார்!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பேசும்போது, நான் என் முதல் ரிலீஸான 'சுட்டகதை' திரைப்படத்தில் தோற்றதும், சிலர் என்னை பார்த்து சிரித்தனர். அதுப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் சம்பாதித்ததை அதில் போட்டேன். அடுத்து என் பெற்றோர் சம்பாதித்ததை வைத்து 'நளனும் நந்தினியும்' உள்பட சில படங்களை தயாரித்து வருகிறேன். ஐ.டி. பீல்டை சார்ந்த என்னை நம்பி என் என்.ஆர்.ஐ. நண்பர்கள் பணம் போட, படம் எடுக்க காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை யாரிடமும் ஒரு பைசா நான் வாங்கவில்லை, சினிமாவை என் சொந்த காசில் கற்றுக்கொண்டு, பிறகு என்னை நம்பியவர்கள் துட்டில் பணம் எடுப்பேன். ஜெயிக்கிற குதிரையாக இருக்க வேண்டுமென்பது என் ஆசை அல்ல, ஓடுகிற குதிரையாக தொடர்ந்து இந்த பீல்டில் இருக்கவே விரும்புகிறேன் என்றார்!

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)