
சிம்புவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா பிறகு அவருடனான காதலை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். கார் கம்பெனி திறப்பு விழாவுக்கு வரவேண்டும் என்று ஹன்சிகாவிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இது பற்றி விழா குழுவினர் கூறும்போது, ஐதராபாத்திலிருந்து சென்னை வர அவர் கேட்டுக்கொண்டபடி விமான டிக்கெட் புக் செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் நெருக்கத்தில் மேலும் கூடுதலாக 5 டிக்கெட் கேட்டார். அதுவும் தர ஒப்புக்கொண்டோம். பின்னர் நிகழ்ச்சி முடிந்த அடுத்த 15 நாட்கள் மட்டுமே தனது போட்டோவை பயன்படுத்த வேண்டும் என்று திடீர் நிபந்தனை விதித்தார்.
ஆனால் ஒரு மாதம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது நிறுவனத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகையாளர்களை தவிர்க்கவே அவர் இந்நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார் என்றனர். ஆனால் ஹன்சிகா தரப்பு இதை மறுத்துள்ளது. நிகழ்ச்சிக்கு வர கேட்டு சிலர் அணுகியபோது ஒப்புக்கொண்டோம். அதன்பிறகு ஹன்சிகா போட்டோவையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்று கூறினோம்.
இதுபற்றி ஒப்பந்தத்தில் சேர்க்கும்படி கேட்டபோது மறுத்து விட்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்க மறுத்தார். இது பல நாட்களுக்கு முன்பே அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சொல்வதுபோல் கடைசி நேரத்தில் ஹன்சிகா இந்த முடிவை எடுக்கவில்லை. மேலும் பத்திரிகையாளர்களிடம் ஹன்சிகா என்றுமே நட்புடன் இருக்கிறார். அவர்களை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என்கிறது ஹன்சிகா தரப்பு.