Recent Post

‘என் வழி தனி வழி’: மீண்டும் களமிறங்கினார் ஆர்கே




ரஜினியின் ஃபேமஸான பஞ்ச் டயலாக் திரைப்படமாகிறது. படையப்பா படத்தில் ரஜினி அடிக்கடி கூறும் பஞ்ச் டயலாக் ‘என் வழி தனி வழி’.
இந்த பஞ்ச் டயலாக்கை அப்படியே ஒரு புதிய படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் ஆர்கே. இவர், ‘எல்லாம் அவன் செயல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். சமீபத்தில் வெளியான ‘ஜில்லா’ படத்திலும் நடித்திருக்கிறார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘என் வழி தனி வழி’ படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். இவர்தான் ஆர்கேயை அறிமுகப்படுத்தியவர். படத்தில் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகிகளாக பூனம் கவுரும் மீனாக்‌ஷி தீக்‌ஷித்தும் நடிக்கிறார்கள்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் ரஷ்யாவை சேர்ந்த அட்லீனா கேத்தரீனா என்கிற புகழ்பெற்ற டான்ஸரை ஆடவைத்து இருக்கிறார்கள். உலக அளவில் ரோப் டான்ஸ் ஆடுவதில் பிரசித்தி பெற்றவர்தான் இந்த கேத்தரீனா. இவர், முதன்முதலில் இந்தப்படத்தின் மூலம் தான் தமிழுக்கு, ஏன் இந்தியாவுக்கே இறக்குமதி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)