கிஷோர் ஹீரோவாக நடிக்கும் படம் தமிழ், கன்னடம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தமிழ் பதிப்புக்கு காதலி காணவில்லை என்றும், கன்னட பதிப்பிற்கு பீஷ்மர் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஹார்த்திகா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தயாள் ஓஷா ஒளிப்பதிவு செய்கிறார், ரவி-ராஜா என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள்.
"நாங்கள் இருவரும் இணைந்து 18 படங்கள் இயக்கி இருக்கிறோம் இது 19வது படம். காதல் புனிதமானது என்ற ஒற்றை வரிதான் கதை. விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரொமாண்டிக் ஆக்ஷன் படமாக உருவாக்கி வருகிறோம். சென்னை, பெங்களூர், தர்மபுரி, அரூர் மாதேஸ்வரன் மலை பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. பாடல்கள் பாங்காக்கில் படமாகிறது. தயாரிப்பாளர் ஜி.ஆர்.காமெடி கேரக்டரில் நடிக்கிறார்" என்கிறார்கள் ரவியும் ராஜாவும்.