Recent Post

இரவில் படமாக்கப்பட்ட கார்த்தி பட க்ளைமேக்ஸ்!



பிரியாணி வெற்றிக்குப் பிறகு கார்த்தி, ‘அட்டக்கத்தி’ புகழ் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி கேத்ரின் தெரெசா. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டதாம். சமீபத்தில் க்ளைமேக்ஸ் காட்சியை சென்னை அருகே உள்ள பெரம்பூரில் படம்பிடித்திருக்கிறார்கள்.
அதுவும் இந்த க்ளைமேக்ஸ் முழுவதுமே இரவு நேரத்தில் எடுத்திருக்கிறார்கள். இது படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறனர் படக்குழுவினர். மேலும் இதில் கார்த்தி பிரமாதமாக நடித்திருக்கிறாராம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)