Recent Post

தாவணிக்காற்று: முன்னோட்டம்




ஸ்டூடியோ சந்தோஷ் தயாரிக்கும் படம் தாவணிக்காற்று. இதில் நாயகனாக தமிழ், நாயகியாக ஆராத்யா நடிக்கின்றனர். முரளி, சுரேஷ், ஷோகிப், ரேகா, ரவிக்குமார், பேபி ஐஸ்வர்யா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி வி.ஆர்.பி. மனோகர் இயக்குகிறார்.

அகத்தில் ஒருவனாகவும் புறத்தில் ஒருவனாகவும் வாழக்கூடிய ஒரு இளைஞன் வாழ்க்கையில் தென்றலாக வருகிறாள் ஒரு பெண். அவனது அகத்தையும் புறத்தையும் அவள் இணைத்தாளா என்பது கதை.

இப்படத்துக்காக தத்தை நானும் தத்தி தத்தி உந்தன் உள்ளம் தொத்தி தொத்தி என துவங்கும் பாடல் குற்றாலத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள பங்களா ஒன்றில் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டு உள்ளது.

சருகென சருகென கருதி கிடந்தேன் என்ற மெலடி பாடலும் இடம் பெறுகிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

ஒளிப்பதிவு: முத்ரா, இசை: உதயன், எடிட்டிங் உதயசங்கர், நடனம்: செல்வி, ரமேஷ், ஸ்டண்ட்: குன்றத்தூர் பாபு

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)