Recent Post

குக்கூ விமர்சனம்



kukku
நடிப்பு : தினேஷ், மாளவிகா, ‘ஆடுகளம்’ முருகதாஸ்
ஒளிப்பதிவு : பி.கே.வர்மா
இசை : சந்தோஷ் நாராயணன்
எடிட்டிங் : ஷண்முகம் வேலுச்சாமி
இயக்கம் : ராஜு முருகன்
தயாரிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
நாம் எத்தனையோ பார்வை இல்லாதவர்களை பார்த்து இருப்போம். ஆனால் அவர்கள் மீது நமக்கு வருவது கருணைதான். அப்படிபட்டவர்கள் வாழும் உலகம் நாம் வாழும் உலகத்தைவிட சிறந்தது என்பதை சொல்ல வந்திருக்கும் படம்தான் இந்த குக்கூ.
அட்டக்கத்தி தினேஷ்(தமிழ்), மாளவிகா(சுதந்திரகொடி) இருவரும் பார்வையற்றவர்கள். எதிர்பாராதவிதமாக ஒருவரை ஒருவரை ஒருவர் சந்திக்கும் இவர்கள் சிறுசிறு மோதல்களுக்கு பின்னர் காதல் கொள்கின்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவுக்கு மீறி அன்பு செலுத்தி ஓசையாலும், வாசனையாலும் செய்யும் காதல் கவிதைத்தனமானது.
ஆனால் மாளவிகாவின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு மாளவிகாவை இன்னொருவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அண்ணனின் சதியில் இருந்து மாளவிகா தப்பித்தாரா? தினேஷை திருமணம் செய்தாரா? என்பதுதான் இரண்டாவது பாதி கதை.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்த படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார் அட்டகத்தி தினேஷ். கனமான கதாபாத்திரம் என்றாலும் அதை மிக அழகாக செய்து இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு எக்ஸ்பிரஷனும் பிரமாதம். குறிப்பாக, தினேஷ் அம்மா இறந்தவுடன் இறுதிச் சடங்கின்போது கடைசியாக பார்த்துகங்க என்று வெட்டியான் சொல்லும்போது பார்வையற்ற தினேஷ் அம்மா முகத்தை விரலால் வருடம் காட்சி நெகிழ்ச்சி. புதுமுகம் நாயகி மாளவிகா அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருந்திக்கிறார்.
தினேஷின் நண்பர்களாக வரும் இளங்கோ, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர்களின் நடிப்பு மிக அருமை. இவர்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கின்றது.
இசை சந்தொஷ் நாராயணன். பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை மிக அருமை. கண்களை உறுத்தாத மிகத்தெளிவான ஒளிப்பதிவு.
இரண்டாவது பாதி திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறுவது போல தெரிந்தாலும், க்ளைமாக்ஸில் நம்மையெல்லாம் அசத்திவிட்டார் இயக்குனர்.  ஆனந்த விகடனில் வட்டியும் முதலும் என்ற விறுவிறுப்பான தொடரின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்த ராஜு முருகனின் முதல் படம் இது. தெளிவான திரைக்கதை, அளவான வசனம், அழுத்தமான காட்சியமைப்பு போன்றவற்றின் மூலம் ஒரு திருப்தியான படத்தை கொடுத்திருக்கிறார் ராஜு முருகன்.
மொத்தத்தில் குக்கூ…குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)