சென்னை,மார்ச்.03 (டி.என்.எஸ்) பொறுப்பில்லாம் ஊர் சுற்றுவதையே வேலையாக செய்து வரும் நாயகன் அமரன், தனது அம்மாவின் பேச்சைக்கேட்டு, மதுரையில் உள்ள தனது அத்தையின் காய்கறி கடைக்கு வேலைக்குச் செல்கிறார். போன இடத்தில், எதிர்ப்பாராத விதமாக மதுரை போலீஸ் அதிகாரியான சம்பத்தை அமரன் அடித்து விடுகிறார். போலீஸ் என்று தெரியாமல் அடித்துவிட்ட அமரன், பிறகு விஷயம் தெரிய, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, தனது அத்தையின் பேச்சைக்கேட்டு சென்னைக்கு கிளம்புகிறார்.
சென்னைக்கு போகும் அமரன், ரயிலில் நாயகி சோனுவை சந்திக்கிறார். அறை போதையில் இருக்கும் சோனு, அமரனைப் பார்த்து, தெரிந்தவரைப்போல சிரித்து, அவருடன் கூடவே வருகிறார். இதனால் அமரன் குழப்பமடைய, ஒரு கட்டத்தில் இருவரும் ரயிலை தவறவிடுகிறார்கள்.
இதற்கிடையில் இவர்கள் ஒன்றாக நடப்பதை பத்திரிகை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திர்கையில் போட்டுவிடுகிறார். பிறகு தான் தெரிகிறது, சோனு ஜாதி கட்சி ஒன்றின் தலைவர் பெண் என்று. இந்த பத்திரிகை செய்தியாள் கோபடமையும், சோனுவின் தந்தை ஆஷிஷ் வித்தியார்த்தி இருவரையும் கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். இதற்கிடையில், அமரனிடம் அடி வாங்கிய போலீஸ் அதிகாரி சம்பத்தும் அமரனை பழி வாங்க அவரை தேடுகிறார்.
இவர்களிடம் இருந்து அமரன் தப்பித்தாரா? சோனு ஏன் அமரனுடன் ஒட்டிக்கொண்டார்? வெறும் பத்திரிக்கை செய்தியை மட்டுமே படித்துவிட்டு மகளை ஏன் கொலை செய்ய ஆஷிஷ் வித்யார்த்தி துரத்துகிறார் போன்ற கேள்விகளுக்கு விடைதான் க்ளைமாக்ஸ்
1990 களில் வர வேண்டிய படம், ரொம்ப காலதாமதமாக வந்துவிட்டது. (இயக்குநர் ஜீவன், இயக்குநராக வேண்டும் என்று நினைத்த போது எழுதிய கதையாக இருக்குமோ!)
இருக்கும் ஊரில் இருந்து வேறு ஒரு ஊருக்குச் செல்லும் ஹீரோ, அங்கு யாரையாவது அடித்துவிடுவது, அடி வாங்கியவர் ஹீரோவை துரத்த, இறுதியில் என்ன நடந்தது? இது பல படங்களில் வந்துவிட்டதே! என்று யோசித்த இயக்குநர் ஜீவன், இடையே நாயகிக்கு ஒரு ஃபிளாஸ் பேக், அவருக்கு வேறு ஒரு காதலன், அந்த காதலன் கொலை, என்று திரைக்கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்துள்ளார். ஆனால், அதுவும் புதிதல்ல என்பதுதான் கொடுமை.
ஹீரோ புதுமுகம் அமரன், ஹீரோயின் சோனு என்று அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். கஞ்சா கருப்பின் காமெடி, தாங்க முடியசல சாமி...! என்று ரசிகர்களை கதற வைக்கிறது. சம்பத், ஆஷிஷ் வித்யார்த்தி இருவரும் எப்போதும் போல தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
டி.இமானின் இசை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு பாடல்கள் சுமார் ரகம்.
ஒளிப்பதிவாளராக படத்திற்கு பலம் சேர்த்துள்ள ஜீவன், இயக்குநராக படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. ஒரு பாட்டு முடிந்து சில நிமிடங்களிலேயே அடுத்த பாட்டைப் போட்டு ரசிகர்களுக்கு புகை பிடிக்கும் ஞாபகத்தை வரவைத்துவிடுகிறார்.
கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு அனைத்துமே ரொம்ப பழைய காலத்து பழரசமாக உள்ளது. மொத்தத்தில் 'அமரா' ரொம்ப சுமாரா இருக்காரு.
ஜெ.சுகுமார் (டி.என்.எஸ்)