அமீரின் ராம் படத்தில் நடித்த கஜாலாவை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. யுனிவர்சிட்டி, ஏழுமலை, ஜோர், நீ வேணுண்டா செல்லம், எம் மகன், மதராஸி, ராமன் தேடிய சீதை, துரை படங்களில் நடித்தார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் இருந்து வந்தவர் மீண்டும் தெலுங்கிற்கு திரும்பினார். அங்கும் மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி விட்டார். இதற்கிடையில் அவருக்கு திருமணமாகி மஸ்கட்டில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும். இதற்காக உடம்மை ஸ்லிம்மாக்கி இருப்பதாகவும். தனது மேற்படிப்பிற்காகவே சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததாகவும் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதோடு சென்னையில் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மீடியா நண்பர்கள், மானேஜர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளார்.