Recent Post

திரைப்பட நகரம்: முன்னோட்டம்




உதயம் ஸ்கிரீன்ஸ் பாசத்தாய் மூவீஸ் வழங்க எஸ்.பி. ஞானமொழி முருகன், எஸ்.சுப்பிரமணியம், ஈரோடு தாம்சூர் ஆகியோர் தயாரிக்கும் படம் 'திரைப்பட நகரம்'.

இதில் முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி, தம்பி ராமையா, எஸ்.என். சுரேந்தர், காதல் தண்டபாணி, கானா பாலா, ஆர்.சுந்தர்ராஜன், கொட்டாச்சி, பிரியா, தேவதர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஆறு நண்பர்கள் சென்னையில் ஒரு அறையில் தங்கி சினிமா வாய்ப்புக்காக காத்து இருக்கின்றனர். அவர்கள் சூழ்நிலை புரிந்து தேவதர்ஷினி வீட்டு வாடகை வாங்காமல் அவ்வப்போது உணவு தந்து உதவுகிறார். ஒரு படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. அதை நல்லபடியாக உருவாக்குகிறார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மூன்று மூன்று பேராக பிரிகின்றனர். படம் பாதியில் நிற்கிறது. மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்து படத்தை முடித்தார்களா? என்பது கதை.

இசை: நித்யன் கார்த்திக், ஒளிப்பதிவு: கே.நித்யா எடிட்டி: எம்.ஆர்.சீனிவாசன், இயக்கம்: எஸ்.பி.ஞானமொழி.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)