வாரிசு நடிகர்கள் சினிமாவை ஆக்ரமிக்கும் காலமிது. அந்த வகையில் தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை, விஜய், சூர்யா, பிரசாந்த், தனுஷ், கார்த்திக், சாந்தனு, சிபிராஜ், மனோஜ், விக்ரம்பிரபு, கெளதம் கார்த்திக் என ஒரு பெரும் பட்டாளமே உள்ளது. இந்த வரிசையில் டைரக்டர் வி.சேகரும் தனது மகன் காரல் மார்க்ஸை தற்போது சரவண பொய்கை என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார். இந்த நிலையில, இயக்குனர் தங்கர்பச்சானும் தனது மகனை ஹீரோவாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
கடைசியாக சாந்தனு-இனியா நடித்த அம்மாவின் கைபேசி படத்தை இயக்கிய தங்கர்பச்சான், அதற்கு முன்பே பிரபுதேவா- பூமிகாவை ஜோடி சேர்த்து தான் இயக்கிய களவாடிய பொழுதுகள் என்ற படத்தை ரிலீஸ் பண்ணவும் தீவிர முயற்சி எடுத்தார். அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக பிரபுதேவாவைகூட மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தார். இருப்பினும் படம் இன்னமும் போனியாகவில்லை.
அதனால், விலைபோகாத படத்துக்காக காலத்தை வீணடித்து விட வேண்டாம் என்று தனது மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர், மகனுடன் முன்னணி ஹீரோயினி நடித்தால்தான் படத்தை விற்க முடியும் என்பதால் சில நடிகைகளிடம் கால்சீட் பேசி வருகிறார் தங்கர்.