நய்யாண்டி பட தொப்புள் சர்ச்சைக்குப்பிறகு நஸ்ரியாவின் தமிழ் சினிமா மார்க்கெட் சரிந்தபோது, அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட கோலிவுட் நடிகைகளில் நயன்தாரா, லட்சுமிமேனன் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். காரணம், இவர்கள் குறி வைத்த ஹீரோக்களின் படங்களெல்லாம் நஸ்ரியா பக்கம் வரிசைகட்டி நின்றன.
ஆனால், அதை நய்யாண்டி சர்ச்சைதான் கலைத்து விட்டது. அதையடுத்து மலையாள நடிகர் பகத் பாசிலை நஸ்ரியா திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற செய்தி மேற்படி நடிகைகளுக்கு மேலும் இனிப்பு செய்தியானது. இருப்பினும், இப்போது வாயை மூடி பேசவும் படத்தில் நடித்துள்ள நஸ்ரியா, திருமணத்துக்குப்பிறகும் நடிப்பேன் என்று செய்தி வெளியிட்டிருப்பது கோலிவுட் நடிகைகளை அதிர வைத்திருக்கிறது.
மேலும், நஸ்ரியாவின் இந்த அறிவிப்பினால், இனி அவர் நடிக்க மாட்டார் என்று நினைத்த டைரக்டர்கள்கூட இப்போது அவருக்கு கதை பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த தகவலை தற்போது நயன்தாரா, லட்சுமிமேனனை வைத்து படம் பண்ணும் சில இயக்குனர்களே கூறி வருவதால், தங்களுக்கு வரவேண்டிய புதிய வாய்ப்புகள் நஸ்ரியா பக்கம் திரும்பி விடுமோ என்று அவர்கள் இருவருமே உள்ளூர அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.