Recent Post

வசூல் பிரச்சினை! பின்வாங்கினார் வைகைப்புயல் வடிவேலு!!



NT_140330140601000000
வடிவேலுவைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளைக் கண்டுதான் அஞ்சி நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார். மற்றபடி சினிமாக்காரர்களைப் பார்த்து அவருக்கு எந்த பயமும் இல்லை. அதனால் தான், ரஜினி படமே வந்தாலும் எனக்கு கவலையில்லை. என் படமும் அதே நாளில் வெளியாகும் என்று தில்லாக கூறிவந்தார்.
அதையடுத்து, ஏப்ரல் 11-ந்தேதி விஷால் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனபோதும், களங்கவில்லை வடிவேலு. வரட்டும் இன்னும எத்தனைபேர் வேண்டுமானாலும் வரட்டும். நான் மோத தயாராக இருக்கிறேன் என்று முக்கிய தியேட்டர்களை பிடிக்கும் வேலைகளில் தீவிரமடைந்தனர்.
ஆனால், இப்போது பார்த்தால், ஏப்ரல் 11-ந்தேதியில் தனது தெனாலிராமன் படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளாராம் வடிவேலு. காரணம், ஒரேநாளில் இரண்டு மெகா படஙக்ள் மோதினால் வசூல்தான் பாதிக்கும் என்று சில சினிமா பிரபலங்கள் அறிவுறுத்தினார்களாம்.
அதையடுத்து வேகம் முக்கியமல்ல, விவேகம்தான் முக்கியம் என்று முடிவெடுத்த வடிவேலு, இப்போது தனது படத்தை ஏப்ல் 18ந்தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்.
இதனால் ஏகபோக சந்தோசத்தில் இருக்கும் விஷால், வடிவேலு படத்துக்கு செல்லவிருந்த மொத்த தியேட்டர்களிலும் தனது படத்தை வெளியிட்டு ஒரே வாரத்தில் கலெக்சனையும் அள்ளி விட வேண்டும் என்று வரிந்து கட்டி நிற்கிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)