Recent Post

சிம்புவை துரத்தும் மிஷ்கின்!




Mysskin following Simbu
சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களால் கைவிடப்பட்ட முன்னணி இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் பரந்த மனசு கொண்டவராக மாறி வருகிறார் சிம்பு. அந்த வகையில், விஜய், சூர்யா போன்ற நடிகர்களால் கைவிடப்பட்டு நிர்கதியாக நின்று கொண்டிருந்த கெளதம்மேனனுக்கு சிம்புதான் தக்க சமையத்தில் கைகொடுத்தார். அதையடுத்து இரண்டாம் உலகம் படத்தை ப்ளாப்பாக கொடுத்த செல்வராகவனைக் கண்டாலே முன்னணி ஹீரோக்களெல்லாம் தெறித்து ஓடிக்கொண்டிருக்க சிம்புவிடம் கேட்டபோது, உங்கள் படத்தில் நடிக்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை. அதனால் கண்டிப்பாக கால்சீட் தருகிறேன் என்று சொல்லி ஒப்பந்தமானார்.

அதையடுத்து இப்போது, மிஷ்கினும் சிம்புவை துரத்துகிறாராம். யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என வரிசையாக தோல்விப்படங்களை கொடுத்தவர் என்பதால், மிஷ்கின் எதிர்பார்க்கிற எந்த மேல்தட்டு ஹீரோக்களும் அவர் சொல்லும் கதையை காது கொடுத்து கேட்ககூட தயாராகயில்லை.

அதனால்தான், ஹீரோக்களால் கைவிடப்பட்ட டைரக்டர்களுக்கு கைகொடுக்கும் நடிகராகி விட்ட சிம்புவை இப்போது தனது புதிய படத்தில் நடிக்குமாறு துரத்திக்கொண்டு வருகிறாராம் மிஷ்கின். தற்போது வாலு, வேட்டைமன்னன், சட்டென்று மாறுது வானிலை, இது நம்ம ஆளு என பல படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு, மிஷ்கினுக்கு இன்னமும் பிடி கொடுக்கவில்லையாம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)