Recent Post

ரொம்ப நல்லவன்டா நீ...!: ஏ.வெங்கடேஷ் இயக்கும் திகில் படம்!



மகாபிரபு, சாக்லேட், குத்து, ஏய், உள்பட பல கமர்ஷியல் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ், இப்போது ரொம்ப நல்லவன்டா நீ... என்ற படத்தை இயக்குகிறார். சின்னத்திரை நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள அறிமுகம் ஸ்ருதி பாலா ஹீரோயின். கடலோர கவிதைகள் ரேகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இயக்குனர் ஏ.வெங்கடேசும், எட வாலா ரெட்டி என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

"இதுவரை கமர்ஷியல், ஆக்ஷன் படங்கள் மட்டும்தான் இயக்கிக் கொண்டிருந்தேன். ஒரு திகில் படம் எடுத்தால் என்ன என்ற தோன்றியது இந்தப் படத்தை ஆரம்பிச்சிட்டேன். படத்தின் ஹீரோ ஒரு அப்பாவி, அதாவது 80களில் பாக்யராஜ் சார் இருப்பாரே அந்த மாதிரி. அந்த கேரக்டருக்கு பொருத்தமான ஆளை தேடினப்போ கிடைத்தவர்தான் செந்தில். அழகா பிரஷ்சா ஒரு ஹீரோயின் வேணும்னு கேரளாவுலேருந்து ஸ்ருதியை அழைச்சிட்டு வந்திருக்கேன். காமெடியும், த்ரில்லரும் பிப்டி பிப்டி மிக்ஸ் பண்ணி இந்த படத்தை எடுத்துக்கிட்டிருக்கேன்" என்கிறார் ஏ.வெங்கடேஷ்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)