
‘நெடுஞ்சாலை’யில் ஹீரோயினாக நடித்துள்ள மலையாள நடிகை ஷிவதா கூறியதாவது: எர்ணாகுளம் அருகிலுள்ள அங்கமாலியை சேர்ந்த நான், திருச்சியில் பிறந்தேன். சென்னை மற்றும் கேரளாவில் படித்தேன். மலையாளத்தில் பாசில் இயக்கிய ‘லிவ்விங் டூகெதர்’ படத்தில் அறிமுகமானேன். இப்போது ‘நெடுஞ்சாலை’யில் நடித்துள்ளேன். பெரிய பட்ஜெட் படம், வித்தியாசமான கதைக்களம் என்பதால் கடினமாக உழைத்தேன். 80களில் நடக்கும் கதை. நெடுஞ்சாலையில் ‘தாபா’ நடத்தும் ஒரு குடும்பத்தை சேர்ந்த மங்கா என்ற மலையாளப் பெண் வேடம். இதற்காக 6 மாதங்கள் நடிப்புப் பயிற்சிப் பெற்று, லோக்கலாக பேசிப் பழகினேன். இப்படத்துக்காக 2 வருடங்கள் காத்திருந்தேன். நல்ல படத்துக்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். படங்களின் எண்ணிக்கையை விட, எப்படிப்பட்ட படத்தில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.