Recent Post

கிஷோரின் காதலி காணவில்லை



கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படம் “காதலி காணவில்லை”. 
கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார். இப்படத்துக்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ரவிராஜா. தயாள் ஓஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
படத்தை தயாரிப்பவர் ஜி.ஆர். இவர், தமிழ் உள்பட கன்னடத்திலும் பல படங்களை தயாரித்திருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடிகராக தன் வாழ்கையை துவங்கியவர். “காதலி காணவில்லை” படத்திலும் ஜி.ஆர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது குறித்து இயக்குனர் கூறியதாவது..
நாங்கள் இருவரும் இணைந்து பதினெட்டு படங்களை இயக்கி இருக்கிறோம். இதில் காதல் புனிதமானது என்கிற ஒற்றை வரிக் கதையை விறு விறு திரைக்கதையாக்கி இருக்கிறோம் ஆக்ஷன் மற்றும் காதல் கதையாக காதலி காணவில்லை. வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.சென்னை,பெங்களூர்,தர்மபுரி,அரூர் மற்றும் மாதேஸ்வரம் மலை,பாங்காக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)