Recent Post

நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! -ப்ரியாமணி



ருத்தி வீரன் ப்ரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என்று சென்னை வரும்போதெல்லாம் அபிமானத்திற்குரிய டைரக்டர்களையும், படாதிபதிகளையும் சந்தித்து சான்ஸ் கேட்கிறார். ஆனபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில், அவர் யாரையோ ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அதன்விளைவாக தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளது. இந்த செய்தி ப்ரியாமணியின் காதுக்கு
சென்றதையடுத்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் விடுத்துள்ள செய்தியில், நான் தமிழ் படங்களில் நடிக்கவேயில்லை. ஆனாலும் என்னைப்பற்றி அவ்வப்போது ஏதாவது பரபரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டேயிருக்கிறது. அதிலும் கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லை. இதுவரை யாருடனாவது என்னை இணைத்து காதல் கிசுகிசுக்களைத்தான் பரப்பினார்கள். ஆனால், இப்போதோ ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் கர்ப்பமாகியிருப்பதாகவும் வினோதமான செய்திகள் பரப்புகிறார்கள்.

இப்போதுகூட நான் நான்கு படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் பிருதிவிராஜூடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்படி பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னால் யாராவது நம்புவார்களா? என்று கேட்கும் ப்ரியாமணி, தமிழ்நாடு என்னை இப்படியாவது ஒரு வகையில் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்போது ஒருவகையில் சந்தோசமாக உள்ளது என்கிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)