ஷங்கர் இயக்கும் ஐ படத்துக்குப் பிறகு, கோலி சோடா புகழ் விஜய் மில்டன் படத்தில் நடிக்கிறார் நடிகர் விக்ரம். ஏஆர் முருகதாசும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இடம் மாறி இறங்கியவன் எனத் தலைப்பிட்டுள்ளனர்.
ஏக டிமாண்ட்

இந்த ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய லாபம் பார்த்த ஒரே படம் கோலி சோடா. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வேறு மேடைக்கு மேடை இதைச் சொல்லி வருகிறார்கள். எனவே படத்தை இயக்கிய விஜய் மில்டனுக்கு பாராட்டுகளும் வாய்ப்புகளும் தொடர்கின்றன.
விக்ரம்

இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஐ படப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் மில்டனுக்கு கால்ஷீட் தந்துள்ளார் விக்ரம்.
இடம் மாறி இறங்கியன்

இந்தப் படத்துக்கு இடம் மாறி இறங்கியவன் என்ற தலைப்பை தற்காலிகமாக சூட்டியுள்ளனர். படத்தின் அவுட்லைன் மிகவும் பிடித்துப் போனதால் முழு ஸ்க்ரிப்டையும் தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம்.
அடுத்தடுத்து..

இந்தப் படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு, மேலும் இரு படங்களில் நடிக்கவிருக்கிறாராம் விக்ரம்.