“”ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் பயம் வந்திருக்கிறது. இனி மேல் சினிமாவை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாதபடி, பலருக்கும் என் மேல் வந்திருக்கும் நம்பிக்கை நல்ல விஷயம்.
“தீயா வேலை செய்யணும் குமாரு’ கொஞ்சம் வெற்றிக் களிப்பு கொடுத்ததும், அடுத்து எப்படி? என்ற கேள்வி
முதன்மையாக நின்றது. அப்போதுதான் வந்தார்
வசந்தபாலன். நல்ல சினிமாக்களை நேசிக்கிற மனிதர். அவர் சொன்ன கதை அத்தனை பிரமாதம். இதுவரை என் மீது இருந்த பார்வைகளை சுத்தமாக துடைத்தெறிய வேண்டும் என்று சொல்லி எடுத்த படம்தான் “காவியத் தலைவன்’. அதே வேளையில் “ஜிகர்தண்டா’, கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் மதுரை மாஸ் படம். நிஜமாகவே இந்த படங்கள் எனக்கு வேறு ஒரு கலர் கொடுக்கும்.” ஒவ்வொரு வார்த்தையிலும் வசீகரம் செய்கிறார் சித்தார்த். வெற்றி, தோல்வி எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாத பக்குவமான பேச்சு.

வசந்தபாலன், கார்த்திக் சுப்ராஜ் என அடுத்தடுத்து வித்தியாச கூட்டணி… இரண்டு பேருக்கும் வெவ்வேறான சினிமா பார்வைகள் இருக்குமே….?
வசந்தபாலன் சாதாரண ஃபிலிம் மேக்கர் கிடையாது. நாம் கொண்டாட வேண்டிய சினிமாக்களை இனிமேல்தான் எடுத்து வரப் போகிறார். அசத்தல் வேகம், அனுபவ நிதானம், நாமெல்லாம் நினைத்துப் பார்க்காத ஒரு காட்சி படத்துக்கு எந்த அளவுக்குத் துணை சேர்க்கும் என்பதில் அத்தனை கவனம், ஆனால் நாம சொல்கிற யோசனைகளுக்கும் காது கொடுப்பார். ஒரு எதேச்சையான சந்திப்புதான். கதை கேட்டு முடித்ததும் எனக்குள் அத்தனை பரவசம். “ஜிகர்தண்டா’ மதுரை கதை. ஆனால் இதுவரை பார்க்காத கதை. பக்கா கமர்ஷியல் முத்திரைக்கும் உத்திரவாதம். இரண்டுமே வெவ்வேறு களங்கள். நிச்சயம் நல்ல சினிமாக்களில் இருக்க வேண்டும் என பத்து வருடங்களுக்கு முன் திட்டம் போட்டேன். அது இப்போதுதான் நடந்து கை கூடி வந்திருக்கிறது.

இருந்தாலும் “பாய்ஸ்’, “ஆயுத எழுத்து’ வந்த சமயத்தில் இருந்த பரபரப்பில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கிதானே இருந்தீர்கள்…? இப்போது அடுத்தடுத்து தமிழில் படங்கள்….? என்ன திட்டம்…?
சினிமா துரத்திப் பிடிக்கிற கனவல்ல. இழந்து பெறுகிற வரம். இதோ இந்த உயரத்துக்கு “பாய்ஸ்’, “ஆயுத எழுத்து’ போன்ற படங்கள் எனக்கு விசிட்டிங் கார்டுதான். ஆனால் அதை மட்டுமே நான் தடமாக வைத்துக் கொள்ளவில்லை. ஏழு வருடங்களுக்குப் பின்புதான் “180′ படத்தில் நடிக்க வந்தேன். அத்தனை பெரிய இடைவெளிக்குப் பின்பு வந்தாலும் கூட, என்னை அடையாளம் கண்டுபிடிக்கிறாங்க தமிழ் மக்கள். அது போதும். ஆனாலும் சித்தார்த் எங்கேயோ நடித்துக் கொண்டு இருக்கிறான் என்பது ஒவ்வொருத்தருக்கும் தெரிகிறது. தினமும் நியூஸ் பேப்பரில் வந்து கொண்டு இருக்கத் தேவையில்லை. அதை நான் விரும்பவும் இல்லை. நல்ல படங்களில் நடித்தால், நல்ல பெயர் கிடைக்கும் என்பது இப்போது புரிகிறது. எனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை நான் இப்போது உணர்ந்திருக்கிறேன்.

தமிழ் சினிமா பெரிய அளவில் மாறியிருப்பதை கவனிக்கிறீங்களா…? “கோலி சோடா’, “தெகிடி’ என பெரிய ஹீரோக்கள் யாருமே இல்லாமல் படங்கள் கவனம் ஈர்க்குதே…?
தமிழ் சினிமாவை யாரும் ஒதுக்கி விட முடியாது. அர்த்தமுள்ள சினிமாவுக்கான ஆசை என் பக்கமும் இருக்கிறது. நல்ல சினிமாக்களை நானும் கவனிக்கிறேன். ஆனால் அது மாதிரி சினிமாவில் என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்னால் படிக்காதவன் மாதிரியோ, அண்ணனுக்கு நல்ல தம்பியோ, தங்கைக்கு நல்ல அண்ணன் மாதிரியோ என்னால் நடிக்க முடியாது. மக்கள் என்னை இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அந்த ரசனையைச் சட்டென நான் கெடுத்து விட முடியாது. நிதான அடிகள் இந்த இடத்தில் முக்கியம். இப்போது “காவியத்தலைவன்’, “ஜிகர்தண்டா’ இரண்டுமே தமிழ் சினிமாவுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் படங்கள்தான். ஆனால் நல்ல படங்களை நிச்சயம் வரவேற்க வேண்டும். நான் எப்போதும் வரவேற்பேன்.
இருந்தாலும் எல்லா விதமான சினிமாக்களிலும் நடிக்கும் நடிகர்கள் இங்கே குறைவுதான்…. விக்ரம், சூர்யாவுக்கு பின் அந்த இடம் இன்னும் காலியாகவே இருப்பது போன்ற உணர்வுதான் வருகிறது….?
எனக்கு கிடைத்த வாய்ப்பு என் வயதில் உள்ள ஹீரோக்களுக்கு கிடைத்திருக்குமா? என்று தெரியவில்லை. என்னை இயக்கிய இயக்குநர்களும் அப்படி. காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் என நானும் கலவையாக நடித்து வந்திருக்கிறேன். ஒரே விதமான சினிமாதான் தெரியும் என்று நானும் சொல்ல வரவில்லை. பக்கா கமர்ஷியலில், அடிதடி படங்களும் தெலுங்கில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழில் மட்டும் எனக்கு சில கதைகள் கூடி வரவில்லை. அதற்கு எனக்கு இங்கே இருக்கிற சாக்லேட் பாய் இமேஜ்தான் காரணம். அதை உடைக்கிற மாதிரி சில படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறேன்.

அது கிசுகிசுவோ, செய்தியோ உங்கள் காதல் கதைதான் பேசப்படுது…?
என்னைச் சுற்றி வருகிற கேள்விகளில் இது முக்கியமானது. என்னைப் பொறுத்தவரைக்கும் சந்தோஷம், துக்கம் எதுவாக இருந்தாலும் நான் பகிர்ந்து கொள்ள இரண்டு பேர் இருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் சார், ஜெயந்திரா சார் இரண்டு பேரிடமும் அத்தனை நெருக்கம் காட்டியிருக்கிறேன். வேறு யாரிடமும் நான் நெருங்கியதே இல்லை. நெருக்கமும் இல்லை. எனக்கு எல்லா பெண்களிடமும் சுமூகமான உறவு இருக்கிறது. ஆனால் அது கொச்சைப்படுத்தும் அளவுக்கு இல்லை.