வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்து வருகிறார் சுரபி.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
அமலா பால் ஹீரோயின். அமலா பால் தனுஷின் ஜோடியாக நடித்தாலும் வேறொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறார். அவர் சுரபி. இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமானவர்.
வேலையில்லா பட்டதாரியில் ஒரு வேடம் இருக்கிறது என்று தனுஷ் அணுகிய போது மறுப்பேதும் சொல்லாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம் சுரபிக்கு என்கிறார்கள்.
படப்பிடிப்பில் வேல்ராஜைவிடவும் தனுஷ்தான் இயக்குனர் வேலையில் அதிகம் ஈடுபாடு காட்டுகிறாராம். அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக இயக்குனர் ஆவதற்கான பயிற்சிக் களம்தான் இந்தப் படம். வேலையில்லா பட்டதாரி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
