Recent Post

என் மனதிற்கு பிடித்தது சைவம்: ஏ.எல்.விஜய்



என் மனதிற்கு பிடித்தது சைவம்: ஏ.எல்.விஜய்கிரீடம், மதராச பட்டினம், தாண்டவம், தெய்வ திருமகள், தலைவா போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது சைவம் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் குறித்து விஜய் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

சைவம் படம் இனம், மதம் பற்றிய படம் இல்லை. இப்படத்தில் கதாநாயகன், நாயகி என்று யாரும் கிடையாது. சண்டைக்காட்சிகள் ஏதுவும் இல்லை. அதனால் இப்படம் வித்தியாசமான படமாக இருக்கும். தலைவா படத்திற்கு முன் இப்படத்தை இயக்க வேண்டியது. விஜய் படம் கிடைத்ததால் படத்தை தள்ளி வைத்திருந்தேன். இதுவரை பெரிய நடிகர்களை வைத்து இயக்கிய நான் தற்போது புதுமுகங்களை வைத்து இயக்கி வருகிறேன். சென்னையில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள பல விசயங்களை மறந்து விட்டார்கள், அதை ஞாபகப்படுத்தும் படமாக இது இருக்கும். என் மனதிற்கு மிகவும் பிடித்தப்படம்.

நாசர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாசரின் மகனும் நடிக்கிறார். மேலும் தெய்வ திருமகள் படத்தில் நிலா கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி சாரா, இப்படத்தில் தமிழ்செல்வி என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். நிலாவை விட தமிழ்செல்வி அதிகமாக பேசப்படுவாள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)