Recent Post

விக் கொடுத்ததால் மொட்டை போட சம்மதித்த நடிகர்



விக் கொடுத்ததால் மொட்டை போட சம்மதித்த நடிகர்
கிரீடம் விஜய் இயக்கும் சைவம் படத்திற்காக மொட்டை போட்டு நடிக்கிறார் நாசர்.  இப்படம் தவிர மேலும் 6 படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நாசரிடம் மொட்டையடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியபோது தயங்கினார். இதுபற்றி வீட்டில் கலந்துபேசிவிட்டு சொல்வதாக தெரிவித்தார். பின்னர் நாசரின் வீட்டுக்கு சென்றார் விஜய். அங்கு நாசர், மனைவி கமீலா ஆகியோரிடம் கதாபாத்திரத்துக்கு மொட்டைபோடும் காட்சியின் முக்கியத்துவம்பற்றி தெரிவித்தார். ஆனாலும் அரை மனதுடன் இருந்தார் நாசர். இதற்கிடையில் மேக்கப் மேன் ரஷீத்திடம் நாசரின் ஒரிஜினல் முடிபோலவே விக் தயாரிக்கும்படி விஜய் கூறி இருந்தார். சரியான நேரத்தில் அவர் அந்த விக்கை வீட்டுக்கு கொண்டுவந்தார்.

அதைப்பார்த்தபிறகு திருப்தி அடைந்த நாசர் மொட்டைபோட்டு நடிக்க சம்மதித்தார். இதே தோற்றத்துடன் 25 நாட்கள் அவர் நடிக்கிறார். லேசாக கூட முடி வளர்ந்துவிடக்கூடாது என்பதால் ஒவ்வொரு நாளும் அவருக்கு மொட்டை போடப்படுகிறதாம்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)