Recent Post

அரசியல் வேண்டாம்; நடிப்பே போதும்: உதயநிதி ஸ்டாலின்




அரசியல் வேண்டாம் என்றும், நடிகனாகவே இருக்க விரும்புவதாகவும் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து சத்தியமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். அவருடன், அவரது மனைவி துர்கா, மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் வந்தனர்.
முன்னதாக ஸ்டாலின் சத்தியமங்கலம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் வீட்டிற்கு வந்தபோது, அவரது குடும்பத்தினர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு வரவேற்பளித்தனர்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியது:
வேட்பாளர்களை ஆதரித்து அப்பா தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது நானும் அவருடன் செல்வது வழக்கம். 11 வயது சிறுவனாக இருந்த காலம் முதல் அவருடன் பிரசாரத்திற்கு சென்றுள்ளேன். ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை.
தற்போது, நண்பேன்டா என்ற படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறேன். எனக்கு அரசியல் வேண்டாம். நல்ல நடிகனாக வரவேண்டும் என்றே விரும்புகிறேன்.
சண்டைப் படத்தில் நடிப்பது எனக்கு பொருத்தமாக இருக்காது. காமெடி கதாநாயகனாகவே நடிக்க விரும்புகிறேன்.
எனக்கும் சந்தானத்திற்கும் நல்ல காம்பினேஷன் உள்ளது. அதைப் பிரிக்க வேண்டாம். 3-ஆவது படமும் என்னுடைய தயாரிப்பில் உருவாகி வருகிறது. 10 நாள்கள் சூட்டிங் இல்லை என்பதால் அப்பாவுக்கு துணையாக வந்துள்ளேன். ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புகிறேன்.
ஒரு கல், ஒரு கண்ணாடி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சிறு குறைகளை கதிர்வேலன் காதல் படத்தில் சரி செய்தேன்.
கதிர்வேலன் காதல் படத்தில் நன்றாக நடித்துள்ளதாக என்னைப் பாராட்டினார்கள். அடுத்த படத்தில், நடிப்பில் மேலும் கவனம் செலுத்துவேன் என்றார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)