Recent Post

புதுமுகங்களின் தாவணிக்காற்று!



விளம்பர பட இயக்குனர் வி.ஆ.பி மனோகர் டைரக்ட் செய்துள்ள முதல் படம் தாவணிக்காற்று. தமிழ், ஆராத்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். உதயன் மியூசிக், முத்ரா கேமராமேன். "அகத்தில் ஒருவனாகவும், புறத்தில் ஒருவனாகவும் வாழக்கூடிய ஒருவனின் வாழ்க்கையில் தென்றலாக வருகிறாள் ஒரு பெண். அந்த பெண்ணின் வருகை அவனது வாழ்க்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தது, அகத்தையும், புறத்தையும் இணைத்ததா? என்பதுதான் படத்தோட கதை சுருக்கம்.

குற்றாலத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் சிறப்பு அனுமதி பெற்று பிரமாண்ட செட்டு போட்டு பாடல்களை படமாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் காட்சிக்கு சென்னையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதற்கு விதவிதமான வண்ணம் பூசி படமாக்கி இருக்கிறோம். அழகான காதல் கதையை பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து தந்திருக்கிறோம். 6 குறும்படங்கள், 40க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் எடுத்த அனுபவத்தில் இந்த படத்தை நானே தயாரித்து, இயக்கி இருக்கிறேன். மற்ற படங்களிலிருந்து நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும்" என்று தன் படம் பற்றி பெருமையாக பேசுகிறார் டைரக்டர் வி.ஆ.பி.மனோகர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)