தமிழ் சினிமாவில் அழகிய தீயே , பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி உள்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். கேரளத்து நடிகையான இவர், எந்தவொரு படத்திலும் கிளாமராக நடிக்கவில்லை. அதன்காரணமாக கமர்சியல் நடிகைகளுடன் போட்டி போட்டு சினிமாவில் நிற்க முடியாமல் சில ஆண்டுகளிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
அதையடுத்து, சினிமா பக்கமே திரும்பிப்பார்க்காத நவ்யா நாயர், தனது மூன்று வயது மகனை பராமரிப்பதிலேயே முழுகவனத்தையும் செலுத்திக்கொண்டு வந்தார். இந்தநிலையில்தான், திரிஷ்யம் மலையாள படத்தை கன்னடத்தில் ரவிச்சந்திரனை வைத்து ரீமேக் செய்யும் டைரக்டர் பி.வாசு, நவ்யாவை தொடர்புகொண்டார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்த நல்ல குடும்ப வேடம் என்பதால், தற்போது அதில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் நவ்யா.
இதையடுத்து, மேலும் சில இயக்குனர்களும் அவரிடம் கதை சொல்ல அப்பாயிண்மென்ட் கேட்கிறார்களாம். அதற்கு, என் மூன்று வயது மகனை வளர்க்க வேண்டிய முழுப்பொறுப்பும் என்னிடம் உள்ளது. சினிமாவில் முழுநேர நடிகையாகி விட்டால் மகனை சரியானபடி கவனிக்க முடியாது என்று சொன்ன நவ்யா, இப்போதைக்கு எனக்கு அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. அவ்வப்போது ஒரு நல்ல படத்தில் நடித்தாலே போதுமென்று நினைக்கிறேன். அதனால், திரிஷ்யம் வெளியானபிறகு அடுத்த படத்தில் நடிப்பது பற்றி சொல்கிறேன் என்று வந்த வாய்ப்புகளை நிலுவையில் வைத்து விட்டாராம்.