Recent Post

சம்மரில் கலக்க இருக்கும் படங்கள்!



இந்த கோடை காலம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. காரணம் கோடை விடுமுறையை குறிவைத்து பல படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமின்றி காமெடி நடிகர்கள் நடித்த படங்களும் வரிசைகட்டி நிற்பதால் இந்த கோடை விடுமுறை ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய உற்சாகம் தரும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. அதில் முதல் படமாக களமிறங்க இறப்பது வடிவேலு நடித்துள்ள ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’.  இப்படம் ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
கிட்டதட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்த படம் திரைக்கு வரவிருப்பதால் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து கவுண்டமணி நடித்த ‘49ஓ’ படமும் சந்தானம் நடித்த ‘வாலிபராஜா’ படமும் சம்மர் ட்ரீட்டாக வெளிவர இருக்கிறது. கவுண்டமணியும் பெரிய இடைவெளிக்குப் பிறகு ‘49ஓ’  படத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இந்தப் படங்களுடன் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படமும் சம்மர் விருந்தாக வருகிற 4-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
இவைதவிர, கோச்சடையான், ஐ, விஸ்வரூபம் என முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் சம்மர் ரிலீஸ் களத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)