ஏழுமலை’ திரைப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கஜாலா.
தொடர்ந்து, ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்ட வந்தார்.
கடைசியாக தமிழில் 2008ல் வெளியான ‘துரை’ என்ற படத்தில் நடித்த கஜாலா அதன்பின் சமூகநலம் பற்றி படிப்பதற்காக வெளிநாடு போய்விட்டார். இந்நிலையில் அவர் சிறிய இடைவெளியை மீண்டும் நடிக்க வருகிறார்.
மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து கஜாலாவிடம் கேட்டால், “நம் நாட்டில் உள்ள நூறு கோடி பேரில் வெகுசிலருக்கே பிரபலமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிர்ஷ்டவசமாக எனக்கும் அது சினிமா மூலமாக கிடைத்துள்ளது. அதை தக்கவைத்துக்கொண்டு எனது சமூகசேவையை தொடர விரும்புகிறேன்” என்கிறார்.
