Recent Post

நெஞ்சுவலி: மருத்துவமனையில் நடிகை மனோரமா




நெஞ்சுவலி காரணமாக நடிகை மனோரமா (70) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
நடிகை மனோரமா, மூட்டுவலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மூலம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, மனோரமாவுக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட இதய பரிசோதனைகளை டாக்டர்கள் செய்தனர்.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்குத் தேவையான இதய சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)