Recent Post

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் ஜோடி சேர அனுஷ்காவிற்கு அழைப்பு



கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் ஜோடி சேர அனுஷ்காவிற்கு அழைப்பு
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது 'கோச்சடையான்' ரிலீஸ் தேதியை நெருங்கும் வேளையில் அவர் தனது புதிய படத்தின் தயாரிப்பு வேலைகளைத் துவக்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் புதிய படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்காவை அணுகியதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தத் திட்டம் பற்றி எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று இயக்குனர் தரப்பு கூறிவரும்போதும் அனுஷ்காவிற்கு நெருக்கமான தரப்பு இதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அனுஷ்கா இன்னும் முடிவு செய்யவில்லை என்றபோதிலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்கா ஆர்வம் காட்டிவரும்போதும் கால்ஷீட் தேதி, பிரச்சினைகள் இல்லாமல் இருந்தால் அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அனுஷ்கா தற்போது 'ருத்ரம்மாதேவி' மற்றும் 'மகாபலி' என்ற இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றார். அடுத்து கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜித்துடன் அனுஷ்கா நடிப்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றபோதும் இந்தப் படத்திற்கான அவரது ஆடை வடிவமைப்புகள் தயாராகி வருவதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)